தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், அங்கிருந்த சாலைதடுப்புகளில் தலையை முட்டிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
லட்சுமிபுரத்தை சேர்ந்த தினகரன் என்பவர் தனது தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் இருவராக சென்றதால், போலீசார் நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அங்கிருந்த சாலை தடுப்புகளில் முட்டி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது தேனியில் மளிகை கடை நடத்தி வரும் தந்தையை கடைக்கு அழைத்து சென்ற போது 4 நாட்களுக்கு முன்னர் அவரது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததும், இன்று வேறொரு வாகனத்தில் வந்த போதும் மடக்கியதால் ஆத்திரமடைந்து அவ்வாறு நடந்து கொண்டதும் தெரிய வந்தது.
இளைஞர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.