ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ காலிங்கில் சாட்டிங் செய்யும் வசதியை வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் விடுத்துள்ள அறிக்கையில், ஃபேஸ்புக்கில் அனுப்பப்பட்ட இணைப்பு மூலம் நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து வீடியோ மூலம் பேசலாம் என்று குறிப்பிட்டுள்ளளார்.
ஆனால் பேஸ்புக்கில் கணக்கு உள்ளவர்களுடன் மட்டுமே நீங்கள் இணைய முடியும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். தேவையற்ற நபர்கள் வீடியோ காலிங் சாட்டிங்கில் வருவதைத் தவிர்க்க கிரிப்டோகிராபர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சோதனைகைள் நடந்து வருவதாகவும், வரும் வாரங்களில் வீடியோ சாட்டிங் முறை அமலுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் மார்க் கூறியுள்ளார்.