சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பாரிமுனை பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருடன் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 30 போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் நால்வருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் வசித்து வந்த பரங்கிமலை பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
உதவி ஆய்வாளர் பணிபுரிந்த காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பயன்படுத்திய ரோந்து வாகனமும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.