சென்னையில் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு வீடுவீடாகச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஊரடங்கை நடைமுறைப்படுத்தக் காவலர்கள் நாள் முழுவதும் பணிபுரிவதால் அவர்களின் குடும்பத்துக்கு இன்றியமையாப் பொருட்களை வீடுதேடிச் சென்று வழங்கத் திட்டமிடப்பட்டது.
காவலர் பல்பொருள் அங்காடியில் 30 விழுக்காடு தள்ளுபடியுடன் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கென உள்ள மின்னஞ்சல், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றின் மூலம் ஆர்டர் செய்தால், காவலர்கள் வாகனங்களில் பொருட்களை ஏற்றிவந்து வீட்டுக்கே கொண்டு வந்து வழங்குகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் காய்கறிகள் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள 90 காவலர் குடியிருப்புகளுக்கும், தீயணைப்புத் துறையினர் குடியிருப்புகளுக்கும் பொருட்களை வழங்கும் பணியில் ஆயுதப்படைக் காவலர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.