சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 144 தடை உத்தரவை மீறி பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் கார்களில் சுற்றி திரிந்தோர் உள்பட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலில் உள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இதுபோல பிஎம்டபிள்யூ, ஆடி, பியட், பென்ஸ், கார்களில் சுற்றி திரிந்தோரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய காரணமின்றி வெளியே வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவ்வாறு கார்களில் வந்தோர் உள்பட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.