வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக ஆடுகள் கொண்டு வரப்படுவது தடைபட்டிருப்பதால், சென்னையில் ஆட்டிறைச்சியின் விலை கிலோ ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு இறைச்சிக்கு கொண்டு வரப்படும் ஆடுகளின் வரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே சென்னையில் கடந்த வாரம் கிலோ 800 ரூபாயாக இருந்த ஆட்டிறைச்சியின் விலை தற்போது ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் கிலோ 140 ரூபாயாக இருந்த கோழி இறைச்சியின் விலையும் 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.