ஊரடங்கால் மதுபானம் கிடைக்காத நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, போதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.
கோட்டைப்பட்டினத்தில் அருண்பாண்டி என்பவரிடம் குளிர்பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்தால் போதை ஏற்படும் என்றும், தான் சவுதியில் இருந்தபோது அவ்வாறு செய்ததாகவும் அன்வர் ராஜா என்பவர் ஆலோசனை கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி மாலை கோட்டைப்பட்டினம் அன்வர்ராஜா, அருண்பாண்டி மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அசன் மைதீன் ஆகிய மூன்று பேரும், சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனனர்.
இந்நிலையில் நேற்று இரவு கடற்கரைப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அருண் பாண்டியனை மீட்டு போலீசார் விசாரித்த போது, நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும், அசன் மைதீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் அன்வர்ராஜா சிகிச்சை பெற்று வருகிறார்.