பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகாத செய்தி ஒன்றை ஒளிபரப்பியதாக கூறி சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் வதந்தி பரப்பியது தெரியவந்துள்ளது.
சென்னை அருகே பள்ளிக்கரனையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் தம்மை சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் தான் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் அப்பாஸ் வதந்தி பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அப்படி இருக்கையில் பள்ளிக்கரணையில் யாருக்கும் கொரோனா இருப்பதாக பாலிமர் நியூஸ் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. சுய விளம்பரத்திற்காகவும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் இது போன்ற வதந்தி பரப்பும் வகையில் வீடியோ வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.