போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்த 7 பேர் கொண்ட மற்றொரு கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள பென்ஸ் கிளப்பில் போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர் பென்ஸ் சரவணன், தலைவனாக செயல்பட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகி செல்வா என்கிற செல்வகுமார் உள்ளிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ஆயிரம் விளக்கில் செயல்பட்ட மற்றொரு போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டு, மூனிர் உசேன், அவனது கூட்டாளிகள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக போலி கால் சென்டர் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட செல்வகுமாரையும், பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் பிரஸ் ஸ்டிக்கரை காரில் ஓட்டிக் கொண்டு வலம் வந்த பென்ஸ் சரவணனையும் காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.