ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து, உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பவானிசாகரைச் சேர்ந்த முத்தம்மாள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்றில், நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்தார். அப் போது, தனக்கு முன் பக்கம் இருந்த இருக்கையில் அமர முத்தம்மாள் அங்கிருந்து நகன்றதாக கூறப்படுகிறது.
அதே சமயம் பேருந்து வளைவு ஒன்றில் வளைந்துள்ளது. இதனால் கம்பியின் பிடிமானத்தை முத்தம்மாளால் பிடிக்க முயாமல், ஓடும் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து, தலையில் அடிபட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓடும் பேருந்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறினால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.