திருச்சி அருகே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையலில் இருந்த நாணயங்கள், 18ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் தேதி கோவில் வளாகத்தில், வாழைக் கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டிய போது தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்த 1,716 கிராம் எடை கொண்ட 505 தங்க நாணயங்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அதிலிருந்த தங்க நாணயங்கள் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தொல்லியல் அதிகாரி தங்கதுரை, சென்னை தொல்லியல் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அவற்றுள் 492 நாணயங்கள் டச்சு காலத்தை சேர்ந்தவை மற்றும் 10 நாணயங்கள் ஆங்கிலேயர் காலத்தவை என்றும், இந்த நாணயங்கள் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.