சென்னையில் பொறியியல், எம்.பி.ஏ பட்டதாரிகள், பார்க்கிங் அட்டெண்டராக பணிபுரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாண்டிபசாரில் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் கார் பார்க்கிங் செயலி குறித்து பொதுமக்களிடம் விவரிக்கும் பணியை, 18 ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்துக்கு பொறியியல் பட்டதாரி ஒருவர் பார்த்து வருகிறார். தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியில், மேலும் 50 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகளும் பணிபுரிகின்றனர்.1500 பேர் விண்ணப்பித்த நிலையில், 50 பேரை மட்டும் தேர்வு செய்ததாக அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி மட்டுமே போதுமான இந்த வேலைக்கு உயர்கல்வித் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கும் அவல நிலைக்கு, மோசமாகி வரும் கல்வியின் தரமே காரணம் எனக் கூறுகின்றனர்.
((