மறைந்த குடியாத்தம் திமுக எம் எல் ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் நேற்று காலமான அவரது உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொண்டு வரப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்றுகாலை பேரணாம்பட்டு சென்று காத்தவராயன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து நடைபெற்ற காத்தவராயன் இறுதி ஊர்வலத்திலும் ஸ்டாலின் பங்கேற்று நடந்து சென்றார்.