நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
சாந்திநகரில் உள்ள எச்.டி.எஃப்.சி. ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இருவர் இன்று அதிகாலை ஹெல்மெட், முகமூடி அணிந்து கொண்டு ஏடிஎம் மையம் அருகே சுற்றும்முற்றும் நோட்டமிட்டுள்ளனர்.
ஆட்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
எச்சரிக்கை அலாரத்தின் இணைப்பை துண்டித்தபின், இரும்புக்கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை கருவி மூலம் மும்பையிலுள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கிடைக்க, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து செயல்பட்ட பாளையங்கோட்டை போலீசார் கொள்ளையர்களை ஏடிஎம் மையத்திலேயே வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முத்து, சுந்தர்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.