வளர்ந்து வரும் நாகரீக உலகில் கல்வி மற்றும் இணைய தளங்கள் மூலமும், மருத்துவர்களின் அறிவுரைகள் மூலமும் பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்,சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்தம் உறவினர்களும் மருத்துவத்தின் நெறிமுறைகளை அறிந்து கொள்வதுடன், யோகா பயிற்சி, உடல் உறுப்பு தானம், முதலுதவி போன்றவை குறித்து விளக்கும் புதுமையான வேறெங்கும் இல்லாத விழிப்புணர்வு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதய துடிப்பு குறைந்த நிலையில் வரும் நோயாளிகளுக்கு, மருத்துவரும், செவிலியரும் எவ்வாறு முதலுதவி அளிக்கிறார் என்பதை விளக்கும் சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இருதயம், சிறுநீரகம், கண், போன்ற உடல் உறுப்பு தானம் குறித்தும், வளமான வாழ்க்கைக்கு தினமும் யோகா பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
அரசு மருத்துவமனையின் புதுமையான முயற்சியாக பண்ருட்டியை சேர்ந்த மணி என்ற சிற்பி சிமிண்டினால் வடிவமைத்துள்ள இந்த விழிப்புணர்வு சிற்பங்களை அனைவரும் பார்த்துச்செல்கிறார்கள்.