கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர்.
முட்டக்காட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்துக்கு நேற்றிரவு கொள்யைடிக்க வந்த மர்மநபர்களில் முகமூடியணிந்த ஒருவன், சிசிடிவி கேமராக்களை கம்பு மூலம் வேறு பக்கம் திருப்பி வைத்தான்.
இதையடுத்து பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை ஆசா பிளேடால் அறுக்க முயன்றபோது பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பியோடினர். மேலும் மதுரையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் பாதுகாப்பு அலாரமும் ஒலித்துள்ளதையடுத்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.