தேனி அருகே, ஊரின் பெயரை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால், ஊரைவிட்டு துரத்தக் காரணமாக இருந்த டிக்டாக் நண்பர்கள் இருவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய, தேனி சுகந்தி போட்ட ஸ்கெட்ச் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி ..!
டிக்டாக்கில் சுகந்திக்கு பலருடன் ஏற்பட்ட தொடர்பால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். நாளுக்கு நாள் இவரது அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில், சுகந்தியின் நடவடிக்கையால் நாகலாபுரத்தில் உள்ள மற்ற பெண்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, அங்குள்ள மக்கள் டிக்டாக் சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டுத் துரத்தினர்.
இதையடுத்து தனது இந்த நிலைக்கு தன்னுடன் டிக்டாக்கில் பழகிய இருவர் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்த சுகந்தி, தனது புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி அவர்களை கொலை செய்ய நடத்திய உரையாடல், அதே டிக்டாக் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
முன்பெல்லாம் வேலூர், புழல் என சிறைகளில் கொலைக்குத் திட்டம் வகுக்கும் சமூக விரோதிகள் தற்போது எதிரிகளை தீர்த்துக் கட்ட டிக்டாக்கில் திட்டமிடுவதும் ஸ்கெட்ச் போடுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பணி நேரத்தையும் காலத்தையும் செல்போனில் டேட்டாவையும் திருடுவதோடு, குடும்பங்களை சீரழித்து குற்றங்களின் பிறப்பிடமாய் மாறிவரும் டிக்டாக்கை நிரந்தரமாக தடை செய்ய தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!