சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஆண்கள் கழிவறையில் மறைந்துக் கொண்டிருந்த சுபம் பானர்ஜியிடம் விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது தெரியவந்தது. பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.