கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் நடந்த தொடர் திருட்டு தொடர்பாக அடகுக்கடை உரிமையாளர்கள் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், 63 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
மத்திகிரி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன், மதுசூதனன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் வீடு புகுந்து திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், 63 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் தந்த தகவலின்பேரில் திருட்டு நகைகளை வாங்கியதாக அடகுக்கடைக்காரர்கள் ராகேஷ், கணேஷ், சுரேந்தர் சிங், ராஜேந்திரகுமார் ஆகிய வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.