குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
4ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு டீ, காஃபி போன்றவை அவ்வப்போது வழங்கப்படுகிறது. இதே போல் பிஸ்கட், சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. அத்துடன் பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கு பிரிஞ்சி சாதம், சிக்கன் பிரியாவும் கொடுக்கப்பட்டது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்றும் போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.