சென்னை துறைமுகத்துக்கு சீன கப்பலில் வந்த பூனை, கொரோனா வைரஸ் பீதியை ஏற்பட்டுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சீனாவில் தங்கியிருப்போர் இந்தியா வர தடை விதித்து கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து சென்னை வந்த சரக்கு கப்பலில் பொம்மைகள் நிரப்பப்பட்டிருந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, கூண்டு ஒன்றில் உயிருள்ள பூனை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பூனைக்கு கொரானா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், பூனையை வெளியில் எங்கும் விடாமல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.