மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, பதவியில் இருந்தபோது அவதூறாக பேசியதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புகளின் போது பல்வேறு தரப்பினர் வழங்கிய நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக குற்றம்சாட்டியும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தும் டிராபிக் ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து டிராபிக் ராமசாமிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி விசாரணையை ஏப்ரல் 17-க்கு ஒத்திவைத்தார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg