காதலர் தினத்தை ஒட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்த போதும், பூக்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வழக்கமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு மலர்கொத்திற்கு பயன்படுத்தப்படும் மலர்கள் 2 லோடு வரை வந்த நிலையில், காதலர் தினத்தை ஒட்டி 4 லோடு மலர்கள் பெங்களூரு மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ளன.
நேற்று வரை 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 100 ரூபாய்க்கு விறற நிலையில், இன்று 350 ரூபாய்க்கு விற்பனையானது. விலை உயர்ந்தாலும், காதல் பரிசாக ரோஜா மலர்களை வழங்க காதலர்கள் ஆர்வம் காட்டியதால் மலர்கள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் கூறினர்.