மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்ததால் மருத்துவர்,செவிலியர் மீது குற்றம் சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கீதா என்ற கர்ப்பிணி விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் மருத்துவர் ஒருவர் ஊசி போட்டு சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று கூறிச்சென்றுள்ளார். அதன்பின்பு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் தாமதமாக வந்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பிணி வயிற்றில் நீர்குடம் உடைந்து சங்கீதா ஆபத்தான நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சையில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் தாயும் உயிரிழந்தார்.
இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் உயிரிழப்பு என குற்றம் சாட்டி உறவினர்கள் உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.