நெய்வேலி என்எல்சி தலைவர் பள்ளி மாணவிகளுடன் நடனம் ஆடிய விடியோ வெளியாகி உள்ளது.
என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் மற்றும் இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் தமிழர்களின் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் , உயர் அதிகாரிகள் மாணவிகளுடன் நடனம் ஆடினர்.