சேலம் அருகே, ஆட்டோ ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், என்பவர்,போலீசாரின் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களை வைத்திருக்கவில்லை.
இதனால் சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னங்குறிச்சி காவல்நிலைய தலைமை காவலர் கணேஷ், ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசி 600 ரூபாய் லஞ்சமாக பெற்று, அந்தப் பணத்தை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் தலைமைக் காவலர் கணேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.