திருச்சியில் இருந்து 3 புதிய வழிதடங்களில் விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 28 ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் தோகாவுக்கு வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
மதுரையில் இருந்து டெல்லிக்கு தினமும் இயக்கப்படும் 4 விமானங்களில் ஒன்று திருச்சியில் இருந்து புறப்படும் என்றும் சியாம் சுந்தர் கூறியுள்ளார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 40 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.