இன்னும் இரண்டு மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக்(FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில், டிஜிட்டல் கட்டண முறையான பாஸ்டாக், கடந்த 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்த நடைமுறை முதன்முறையாக இந்த நெடுஞ்சாலைகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் அதற்கான பூர்வாங்கப் பணிகளை துவக்கி உள்ளது. இதனால் இந்த இரண்டு சாலைகளிலும் தினசரி பயணிக்கும் சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நெரிசல் இன்றி எளிதில் கடக்க முடியும். சலுகை அட்டை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகளும் பாஸ்டாக் லேன் வழியாக பயணிக்கலாம்.