புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் கல்கண்டில் கலப்படம் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
வேகுப்பட்டியில் உள்ள இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கல்கண்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலின் குருக்கள் ஒருவர் சிறிய உருண்டை வடிவிலான பிளாஸ்டிக் பொருள் கல்கண்டில் கலக்கப்பட்டுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கோவிலுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் கல்கண்டுகளை ஆய்வு செய்தனர். மேலும் கலப்படம் உறுதி செய்யப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.