ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்யாததால், தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 163 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக அதிகரித்தது. 4 நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 1570 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 48 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து 137 புள்ளிகளில் நிலைகொண்டது. வங்கி, நிதி, எண்ணெய் எரிவாயு சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 20 காசுகளாக இருந்தது.