2020 -21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 39 ஆயிரத்து 735 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 300 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 661 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஐடிசி, எல்&டி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ, இண்டஸ் இண்ட் ஆகிய நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய ஏராளமான வரிச்சலுகைகள் வழங்கப்படும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததே பங்குச்சந்தைகளின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.