ஏர் இந்தியாவை விற்பது குறித்து 9 நிறுவனங்களுடன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2007 முதல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அதற்கான விருப்ப விண்ணப்பங்களை வரும் மார்ச் 17 ஆம் தேதி வரை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
இந்த விற்பனை முயற்சியின் ஒரு கட்டமாக, பிரிட்டிஷ் ஏர்வேசின் தாய் நிறுவனமான ஐ.ஏ.ஜி. எஸ்.ஏ (IAG SA), இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், டாடா சன்ஸ் லிமிட்டட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவுக்கு ஏராளமான சொத்துக்களும்,100 க்கும் அதிகமான விமானங்களும் உள்ளதால் சில நிறுவனங்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியாவுக்கு உள்ள கடன்களில் குறிப்பிடத்தக்க அளவை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் மத்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.