நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, 2019 டிசம்பர் 31 வரை முடிவடைந்த 3 மாதங்களில் ஆயிரத்து 565 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட இது 5 சதவிகிதம் அதிகமாகும். சிக்கன நடவடிக்கைகள், குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரி உள்ளிட்ட காரணங்களால் இது எட்டப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 361 வாகனங்களை விற்றுள்ள மாருதி இவற்றில் 23 ஆயிரத்து 663 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
வாகன விற்பனை வாயிலாக கிடைத்த வருவாய் 19 ஆயிரத்து 649 கோடி ரூபாய் எனவும் அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட இது 3 புள்ளி 8 சதவிகிதம் அதிகம் எனவும் அது தெரிவித்துள்ளது.