தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 11 ஆயிரம் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
வருகிற 31-ந்தேதி அவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெறுகின்ற நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.