மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மின்னணு சாதனங்கள், மின்சார சாதனங்கள் , ரசாயனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றன.
இதில் 50 வகையான பொருட்களுக்கான சுங்க வரி 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 56 பில்லியன் டாலருக்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரிகள் உயர்த்தப்பட்டால் செல்போன் சார்ஜர்கள், அணிகலன்கள் போன்றவற்றின் விலை உயரக்கூடும்.