ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 195 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை அரசுக்கு செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜனவரி 23-க்குள், நிலுவை தொகையை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி அளிக்குமாறு, வோடாபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
அதைதொடர்ந்து தொலைதொடர்பு நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், விசாரணைக்கு வரும் வரை தங்களுக்கு அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. இந்த சூழலில், முதல் நிறுவனமாக ஜியோ தனது நிலுவை தொகையை செலுத்தியுள்ளது.