அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) கார்களை விற்று மாருதி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இந்திய வாகன விற்பனை சந்தை மந்தமாக உள்ள நிலையில், டீசல் வாகனமாக பிரஸ்ஸாவின் விற்பனை இந்த அளவுக்கு அதிகரிக்க, அது 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக விற்கப்படும் எஸ்.யு. வி. என்பதும் ஒரு காரணம் என மாருதி தெரிவித்துள்ளது.
இந்த ரக கார்களின் வரிசையில், ஸ்டைலான வடிவமைப்பு, அதிக மைலேஜ் ஆகியவற்றால் சக போட்டியாளரான போர்டு எக்கோஸ்போர்ட்டை பின்னுக்குத் தள்ளி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2016 ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே டாப் 10 கார்களின் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது பெட்ரோல் காரையும் அறிமுகப்படுத்தினால் பிரெஸ்ஸாவின் விற்பனை பல மடங்கு உயரும் என கணிக்கப்பட்டதை அடுத்து, விரைவில் ஒன் பாயின்ட் ஃபைவ் லிட்டர் பெட்ரோல் மாடலை களத்தில் இறக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.