பிரபல அமெரிக்க சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் தனது கடைகளை மூடிவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தை தலைமையமாக கொண்டு செயல்படும் வால்மார்ட்டிற்கு, ஹைபர்மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என உலகம் முழுதும் கிளைகள் உள்ளன.ஆனால் இந்தியாவில், அதன் கிளைகள் துவக்கப்பட்டதில் இருந்தே பலத்த எதிர்ப்பு உருவானது.
மளிகை வியாபாரம் உள்ளிட்டவற்றில் உள்ளூர் சில்லறை வியாபாரிகளின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதில் கொள்கையை பின்பற்றியது,. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான இழப்புகளை வால்மார்ட் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் முக்கிய தொழிலான செங்கல் மற்றும் மோட்டார் வர்த்தகத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
மேலும் இந்தியாவில் வணிகத்தை துவகயத்திலிருந்து இதுவரை மொத்தம் ரூ .2,181 கோடியை இழந்துள்ளது வால்மார்ட் நிறுவனம், எனவே அமெரிக்கவில் உள்ள தலைமையிடம் இழப்பை நிறுத்த விரும்புகிறது. எனவே வால்மார்ட் நிறுவன மூத்த அதிகாரிகள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளை தனது வசம் உள்ள பிளிப்கார்ட்டுடன் வால்மார்ட் இணைக்க வாய்ப்புள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p