அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்ததால், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 600 புள்ளிகளாக நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 257 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே நிப்டி 95 புள்ளிகள் அதிகரித்து, இதுவரை இல்லாத உச்சமாக 12 ஆயிரத்து 311 புள்ளிகளை தொட்டது. நிதி மற்றும் எப்எம்சிஜி நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாயின.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்தததும் முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 6 வாரங்களில் 5 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 65.33 டாலரில் வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 27 காசுகள் உயர்ந்து, 70 ரூபாய் 94 காசுகளாக உள்ளது.