மாருதி கார்களுக்கான வாகனக்கடனின் முன்பணம் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளிட்டவற்றால் கார் விலை அதிகரித்து வாகன விற்பனை தேங்கி உள்ளது. இதை சரி செய்யும் முயற்சியாக துவக்க நிலை கார்களுக்கான முன்பணத் தொகையை 10 சதவிகிதமாக குறைத்து வாகனக்கடன் வழங்கும் திட்டத்தை, கோடக் மஹிந்திரா வங்கியுடன் சேர்ந்து மாருதி அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சோதனை அடிப்படையில் வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த கடனுதவித் திட்டத்தை மேலும் 4 அல்லது 5 பெரிய வங்கிகளுடன் இணைந்து நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.