இரு சக்கர வாகன ஆர்வலர்களுக்கு பிரியமான பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் புதிய வடிவில் மீண்டும் இந்திய சாலைகளை அலங்கரிக்க வருகிறது.
காலத்தின் மாற்றத்தில் காணாமல் போன இந்த வாகனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக புதிய பிறவி எடுத்துள்ளது. முதல் கட்டமாக வரும் 14 ஆம் தேதி புனேவில் பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இதை அறிமுகப்படுத்துவது பஜாஜின் திட்டம். வரிகள் தவிர்த்து இதன் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 95 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம் என பஜாஜ் கூறுகிறது.
முழுவதும் உலோகத்தால் ஆன வடிவமைப்பு, எல்.இ.டி. விளக்குகள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக் என பல கவர்ச்சிகரமான அம்சங்களை தாங்கி பஜாஜ் சேதக் வருகிறது.