புத்தாண்டு நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 189.78 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 443ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து 222 புள்ளிகளை தொட்டது.
வங்கித் துறை, உலோகம், மருந்து பொருள்கள், எரிசக்தி துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. புத்தாண்டின் தொடக்க நாளே, பங்குச்சந்தைகள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.