இந்தியா மற்றும் ஐஸ்லாந்து, லீச்டென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான EFTA இடையே தடையற்ற வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் உள்ள நட்பைக் கொண்டாடும் தருணம் என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் மூலமாக நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின்படி நான்கு நாடுகள் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்யும்.
இதனால் 10 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.