விவசாயக் கடன் பெற வருவோருக்கு துரிதமாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப்புற வங்கி நிர்வாகிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் தென்மண்டல கிராமப்புற வங்கி நிர்வாகிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த நிதித்துறை செயலர்களும், கிராமப்புற வங்கிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர்களுக்கு கிராமப்புற வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கிராமப்புற வங்கிகளை டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டார்.