மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்த நிலையில், இறக்குமதி வரியை குறைத்ததன் விளைவாக, விலைகள் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், வரும் நாட்களில் விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.