அமெரிக்க டாலர் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதால், இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது.
இன்று காலை 42 காசுகள் சரிந்து டாலர் ஒன்றுக்கு 80 ரூபாய் 38 காசுகளாக இருந்தது. உக்ரைனுடனான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியதும், சீனா-தைவான் இடையேயான பதட்டமும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் சீன நாணயங்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும், பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.