தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரியைப் பத்தே முக்கால் விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திலும் குறிப்பிடத் தக்க அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்ததால் வெளிநாட்டு வணிகத்தில் பற்றாக்குறை அதிகரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு வணிகத்தில் உள்ள பற்றாக் குறையைச் சமாளிக்கும் நடவடிக்கையாகத் தங்கம் இறக்குமதியைத் தடுக்கச் சுங்க வரியை உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.