மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 484 புள்ளிகள் சரிந்தது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல், அதையடுத்துப் பெட்ரோலியம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக உலகப் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.
இந்திய பங்குச்சந்தைகளிலும் இது எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 484 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 576ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 119 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 983 ஆக இருந்தது.