மும்பை பங்குச் சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
கொரோனா சூழலில் கடந்த இருவாரங்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று வணிகநேரத் தொடக்கம் முதலே இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 265 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. தகவல் தொழில்நுட்பம், உலோகத் தொழில், மோட்டார் வாகனத் தொழில் நிறுவனங்களின் பங்குவிலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.