டொயோட்டோ கார் நிறுவனம், கார்பன் உமிழ்வில்லாத வாகன உற்பத்தியில் 70 பில்லியன் டாலரை முதலீடாக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா தெரிவித்துள்ளார்.
15க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் சூழ, எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான யோசனைகளை வெளியிட்ட அவர், வரும் 2030க்குள் 30 வகையான பேட்டரி கார்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
வருகின்ற 2040க்குள் புதைபடிவ எரிபொருள் வாகன உற்பத்தியை படிப்படியாய் குறைப்பதற்கான உறுதிமொழியில் டோயோட்டா நிறுவனம் கையெழுத்திடாதது குறிப்பிடதக்கது.